Monday, December 19, 2011

முப்பொழுதும் உன் கற்பனைகள்(Muppozhudhum Un Karpanaigal)


இசைG.V:பிரகாஷ் குமார்
                  இதில் மொத்தம் ஆறு பாடல்கள்.அனைத்தும் எழுதியிருப்பது "தாமரை".கவனிக்க வேண்டியது என்ன வென்றால் வரிகள் அனைத்தும் தமிழில்.பாடல்களின் இடையில் ஆங்கில வார்த்தைகளும் வருகிறது அதை எழுதியது Rap பாடகர் "Blaaze"
                       "ஒரு முறை" பாடலானது ஒரு மாததிற்கு முன்பே வந்து HIT ஆனது அனைவருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன்.
                          "கண்கள் நீயே" எனும் பாடல் ஒர் தாய் தனது ஆண் குழந்தையை பற்றி பாடுவதாக உள்ளது. வரிகள் முதல் முறை கேட்க்கும் போதே கவனம் ஈர்க்கிறது.அதன் வரிகள் "பல நூறு மொழிகள் பேசிடும் முதல் மேதை நீ"
"சுவர் மீது கிறுக்கிடும் பொது ரவிவர்மன் நீ"

                    அடுத்து "மழை பொழியும்" எனும் பாடல் இது காதலன் தனது காதலியின் நினைவில் பாடுவதாக உள்ளது.பெரிதாக கவன்ம் ஈர்க்க வில்லை.
                                "ஒ சுனந்தா" இதில் பிரகாஷ் குமாரின் ஹம்மிங் மென்மையாக மனதை வருடுகிறது.இந்த பாடல் ஏற்கனவே கேட்டது போல் இருந்தலும் இதமாக இருக்கிறது.
                               "ஸொக்கு பொடி" எனும் தொடங்கும் பாடல் இதை பாபா செகல் மற்றும் ஸ்ருதிஹாசன் பாடி இருக்கிறர்கள்.மொத்த ஆல்பதில்
இது மட்டுமே fast beat பாடல்.

                         "யாரோ அவள் யாரோ" மென்சோக பாடல் இதை மொஹமத் இம்ரன் பாடி இருக்கிறார்.அவரது குரலும் இசையும் நம்மை காவர்கிறது.
                                "முப்பொழுதும் உன் கற்பனைகள்" படத்தில் இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் தன் திறமையை நிரூபித்துள்ளார்.

இந்த ஆல்பம் ரசிகர்களுக்கு ஒர் "MELODY மழை"